அதிபர் செய்தி
திரு.S.மதிசுதன்
கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயமானது 1960.10.17ம் திகதி ஊர் பெரியவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு கிராம மக்களின் தளராத முயற்சியால் 1961.03.01ம் திகதி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு “அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்ற பெயருடன் இயங்கத்தொடங்கியது.
ஆரம்ப காலங்களில் ஆரம்பபிரிவு பாடசாலையாக காணப்பட்ட இது தற்போது 1C தர பாடசாலையாக திகழ்கிறது. தற்போது 6 – 13 வரையான தரங்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உயர் தரத்தில் கலை, வர்த்தகப் பிரிவுகள் காணப்படுகின்றது. 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விபயில்கின்றனர். இவர்கள் கற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் அல்லாது இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஆர்வமுடையவர்களாக காணப்படுகின்றனர்.
எனது கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்களின் வெற்றிக்காக அயராது செயற்படுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக பாடசாலை சமூகம் மற்றும் நலன்விரும்பிகள் பாடசாலையுடன் சிறந்த உறவை பேணுகின்றனர். நிச்சயமாக இந்த பாடசாலை எதிர்வரும் காலங்களில் மேலும் சிறந்த நிலையை அடையும்.
திரு.S.மதிசுதன்
அதிபர்
மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம்..






