வரலாறு

வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025

வியாழன் விடுமுறை

பதில் பாடசாலை சனிக்கிழமை

aaa.jpg
Picture1.png

ஏர் பூட்டி சோறு ஊட்டும் வள நாடாம் மட்டக்களப்பின் தென்பால் இயற்கை எழில் கொஞ்சும் கிரான்குளம் என்னும் பதியில் விநாயகர் மகா வித்தியாலயம் அமைந்துள்ளது.


1960ம் ஆண்டு ஐப்பசி மாதம் 17ம்(1960.10.17) திகதி கிரான்குளம் கிராமத்தில் “நந்த வன வளவு” எனப்படும் காணியில் பாடசாலையொன்று உருவாக்கப்பட்டது. இப் பாடசாலையை உருவாக்கிய மூத்தோர்களாக சாமித்தம்பி, தம்பிராசா, நாகண்டான், மாசிலாமணி ஆகியோரும் இன்று வரை சமூகப்பணிகளை செய்து வரும் சாமித்தம்பி குழந்தைவேல், சின்னத்தம்பி முத்துலிங்கம் போன்றோர்களும் விளங்கினார்கள்.

இக் கல்விக்கூடம் அமைவதற்கு பல முன்னோடிகள் அயராது உழைத்தனர். பூ.நாகராசா,வீ.பெரியதம்பி, சா.தாமோதரம், சி.கிருஸ்ணபிள்ளை, ந.முருகுப்பிள்ளை, இ.முருகுப்பிள்ளை, வே.சாமித்தம்பி. கு.காத்தலிங்கம் வயிரமுத்து. க.சீனித்தம்பி ஆகியோர் முக்கியமானவர்கள். கல்விக்கூடம் அமைப்பதற்கான காணியை வள்ளியம்மை தங்கம்மா ஆகியோர் வழங்கினார்கள். கிராமத்து பெரியார்களின் உதவியுடன் ஓலைக்கொட்டில் ஒன்று அமைத்து கல்விச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டன.

பாடசாலை முதல் அதிபராக கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரக்குட்டி நாகண்;டான் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார் ஆரம்பகால ஆசிரியர்களாக சி.கனகசபை, ம.கதிர்காமத்தம்பி, ப.காத்தமுத்து, த.வள்ளியம்மை, த.க. அசுந்தா, பி.லி. சூசம்மா ஆகியோர் பணியாற்றினார்கள். இப்பாடசாலை அரசாங்கத்தில் பதிவுசெய்யும் வரை எவ்வித வேதனமுமின்றி கல்விபுகட்டினார்கள்.


கிராம மக்களின் தளராத முயற்சியால் 1961.03.01ம் திகதி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு“அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்ற பெயருடன் இயங்கத்தொடங்கியது. பின் நாட்களில் “கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம்” என அழைக்கப்படுகிறது.